ads header

Breaking News

தமிழ்மணி கவிதைகள்

                          🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻

     தமிழ்மணி கவிதைகள்       


                                          🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺

  சிகரெட்   


வெள்ளைச் சேலை 

கட்டியிருப்பேன் 

கொள்ளை இன்பம்

 தந்திடுவேன்

உதட்டில் மஞ்சள் 

சாயம் பூசி

உடல் அழகை 

காட்டி நிற்ப்பேன்

என் அழகில் 

மயங்கியவர்கள்

என்னை விலை 

கொடுத்து 

வாங்கிச் செல்வர்

உதட்டோடு 

உதடு வைத்து

சொர்க்கம் 

காண துடிப்பர்

ஆனால் ... ஐயோ ...

என் அடிவயிறு 

பற்றி எரிகிறதே ...!

உடல் 

உருக்குலைந்து போனதே ...!

இனியும் 

நான் தேவையில்லையாம்

என்னை 

கீழேப்போட்டு

க ... க ... 

காலால் 

மிதிக்கிறார்களே ...!

அய்யகோ ... 

இளைஞர்களே ...!

என்னை 

விட்டு விடுங்கள் ! 

- வைர.தமிழ்மணி,
மருதூர் வடக்கு,
வேதாரண்யம்,
நாகப்பட்டினம் மாவட்டம். 







===================  




காதல் ஜோடி





வானவில் அழியும் நேரம்
வானமோ அழுவுது இங்கு
பட்டாடை உடுத்தி வந்த
சிற்றாடை சின்னப்பொண்ணு
நனைந்துதான் நிற்கின்றாள்
நானிக் கோணி
உடம்பெல்லாம் பரவியது சூடு !
உரசத்தான் ஆசை மனசுக்கு
பட்டு ஜிப்பாவும் நனைந்தது
வியர்த்துக் கொட்டிய வியர்வையால் …!
➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽

லாபம்

பலா பழத்தின்
உள்ளே உள்ள
சுளை !     


₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹

கொடுமை


பெற்றவர்கள் 

பெண்ணை 

தாரை வார்த்து 

கொடுத்தார்கள் 

கண்ணீரோடு !  

அவளோ… 

தினமும் 

தாரை வார்க்கிறாள் 

 தனது கண்ணீரை…!

-வைர.தமிழ்மணி,
மருதூர் வடக்கு. 

( இக்கவிதை 29.04.2000 அன்று மலேசியாவில் வானம்பாடி என்ற வார இதழில்வெளிவந்தது. )
================================

காதல் புதுசு 

நான் 

அவனை காதலித்தேன்

அவனும் காதலித்தான்  
என்னையல்ல

என் தங்கையை...! 


( இக்கவிதை 31.07.1999அன்று மலேசியாவில் வானம்பாடி என்ற வார இதழில்வெளிவந்தது. ) 

++++++++++++++++++++++++++

சின்ன  வீடு 


உன்னை பார்த்த நான்  

உன் தங்கையை  

பார்த்ததும் ஓடினேன் ... 

தியேட்டரை நோக்கி!  

சின்ன வீடு  

சினிமா பார்க்க ...! 

( இக்கவிதை 01.05.1999 அன்று மலேசியாவில் வானம்பாடி என்ற வார இதழில் வெளிவந்தது. )


+++++++++++++++++++++++++++++++++


கிளுகிளுப்பு



தொட்டிலில் ஆடும்  

சின்னக் குழந்தை சிரிக்குது

வயசுப் பையனும்  

சாடையாய் சிரிக்கிறான்        

தொட்டில் குழந்தைக்கு  

தாயின் அரவணைப்பு ... !

வயசுப் பையனுக்கு பாவை  

ஒருத்தியின்கிளுகிளுப்பு...!    



( இக்கவிதை  22.05.1999 அன்று மலேசியாவில் வானம்பாடி என்ற வார  இதழில் வெளிவந்தது. )

                                                     ++++++++++++++++++++++++++++

காதல் பைத்தியம் 


என்ன செய்ய போறேன் 

 நான்  

என்ன செய்ய போறேன்...  

பைத்தியம் பிடிச்சிடும் 

போலிருக்கே...! 

உன்னையே உன்னை மட்டும் 

காதலித்து வந்தேனே ...

உனக்கு மனசோ 

 ரொம்ப பெரிசு 

நீ தந்த பரிசோ...  

``லூஸ் “ பட்டம். 

( இக்கவிதை 24.04.1999 அன்று மலேசியாவில் வானம்பாடி என்ற வார இதழில்வெளிவந்தது. ) 

                   +++++++++++++++++++++

கற்பு 


காரிருள் மேகம்  

கிழக்காலே போனது  

குளிர்ந்த ஊதக்காற்று 

 கரும்பு தோட்டத்தில் வீசியது  

காத்திருந்த ரோஜா  

கருகிப் போனது...!  



( இக்கவிதை 06.09.1997 அன்று மலேசியாவில் வானம்பாடி என்ற வார இதழில்வெளிவந்தது. )

🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺


No comments

இந்த தளத்தை பயன்படுத்தியமைக்கு நன்றி.