ads header

Breaking News

SBI Netbanking Registration

SBI Netbanking Registration: இனி டோக்கன் தேவையில்லை; வரிசையில் நிற்கவும் தேவையில்லை!

   சிறப்பு வசதி தரும் எஸ்பிஐ
How to register for SBI net banking online: எஸ்பிஐ வங்கியின் இன்டர்நெட் பேங்கிங் வசதி மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளை நிர்வகிக்க முடியும், மற்ற பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள முடியும். எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள், எஸ்பிஐ நெட் பேங்கிங் வசதியை நேரடியாக வங்கிக்கு செல்லாமல், எஸ்பிஐ ஆன்லைன் தளம் மூலமே ரெஜிஸ்டர் செய்து கொள்ள முடியும்.

இதற்கு முன்னதாக, வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ நெட் பேங்கிங் வசதியை பெற ரெஜிஸ்டர் செய்ய கண்டிப்பாக வங்கிக்கு செல்ல வேண்டிய சூழல் இருந்தது. கூட்டு கணக்கு வைத்திருப்பவர்கள், எஸ்பிஐ நெட் பேங்கிங்கை ஆன்லைன் மூலம் ரெஜிஸ்டர் செய்ய முடியாது. அவர்கள் இப்போதும் வங்கிக்கு செல்லவே அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நீங்களாகவே ஆன்லைன் மூலமாக எஸ்பிஐ நெட் பேங்கிங் வசதியை ரெஜிஸ்டர் செய்ய வேண்டுமெனில், உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் கண்டிப்பாக இருக்க வேண்டும். தவிர, செயல்படக் கூடிய ஏடிஎம் டெபிட் கார்டு இருக்க வேண்டும்.

SBI Net Banking: ஆன்லைனில் SBI நெட் பேங்கிங் ரெஜிஸ்டர் செய்வது எப்படி?
எஸ்பிஐ தளத்தில் ‘New User Activation’சென்று ‘Next’ க்ளிக் செய்க. பிறகு தேவையான விவரங்களை கொடுக்கவும். வங்கி அக்கவுன்ட் எண், CIF எண், வங்கியுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண், வங்கி கிளை எண் ஆகியவற்றை கொடுத்துவிட்டு ‘Submit’ கொடுக்கவும்.

இதன் பிறகு, உங்களின் பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கு OTP அனுப்பபப்டும். பிறகு, OTP எண்ணை டைப் செய்து, கன்ஃபார்ம் பட்டனை அழுத்தவும். தொடர்ந்து, ‘‘I have my ATM card (Online registration without branch visit)’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்து சப்மிட் செய்யவும். ATM டெபிட் கார்டு விவரம் மற்றும் captcha code போன்றவற்றையும் நீங்கள் குறிப்பிட வேண்டியிருக்கும்.

இதன் பிறகு, பயனாளர்களுக்கு தற்காலிக யூசர் பெயர் கிடைக்கும். பிறகு, நீங்களாகவே பாஸ்வேர்டை உருவாக்கிக் கொள்ளலாம். பிறகு, தற்காலிக யூசர் பெயர் மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து லாக் இன் செய்து புதிய யூசர் பெயரை உருவாக்கிக் கொள்ளலாம்.

இறுதியாக, நீங்கள் login password மற்றும் profile password என தனித்தனியே உருவாக்கி, ரகசிய கேள்வியை தேர்வு செய்து அதற்கு பதிலும் கொடுக்க வேண்டும். நீங்கள் Username அல்லது Password மறந்து போனால், இது உங்களுக்கு கைக்கொடுக்கும். பிறகு, பிறந்த தேதி, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், பிறந்த நாடு ஆகியவற்றை பதிவு செய்து submit கொடுக்கவும். இறுதியில், உங்கள் அனைத்து தரவுகளும் சேமிக்கப்பட்டு, நீங்கள் SBI நெட் பேங்கிங் வசதியை பயன்படுத்த தொடங்கலாம்.

No comments

இந்த தளத்தை பயன்படுத்தியமைக்கு நன்றி.