ads header

Breaking News

எழுத்துப் பிழை இல்லாமல் எழுதுவது எப்படி?

எழுத்துப்பிழை இல்லாமல்
தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு  சில விளக்கங்கள்...

"ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்?
ஒரு எளிய விளக்கம்

மூன்று சுழி “ண”,
ரெண்டு சுழி “ன” மற்றும்
"ந" என்ன வித்தியாசம்?

தமிழ் எழுத்துகளில்
ரெண்டு சுழி "ன" என்பதும், மூன்று சுழி "ண" என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கு.

"ண" இதன் பெயர் டண்ணகரம்,
"ன" இதன் பெயர் றன்னகரம்,
"ந" இதன் பெயர் தந்நகரம் என்பதே சரி.

மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூன்று சுழி "ணகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வருகிற உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால் இதற்கு "டண்ணகரம்" என்று பெயர். (சொல்லிப் பாருங்களேன்!)

தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த இரண்டு சுழி "னகர" ஒற்றெழுத்து வருகிறதோ, அதையடுத்து வருகிற உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால் இதற்கு "றன்னகரம்" என்று பெயர். (சும்மா சொல்லிப்பாருங்க!)

இது இரண்டும் என்றுமே மாறி வராது..
நினைவில் கொள்க..

மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தால்...
பக்கத்தில் 'ட' இருக்கா,
அப்ப இங்கே மூன்று சுழி 'ண்' தான் வரும்.
ஏனென்றால் அது "டண்ணகரம்".

கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தால்...
பக்கத்தில் 'ற' இருக்கா
அப்ப இங்க இரண்டு சுழி 'ன்' தான் வரும்.
ஏனென்றால் அது "றன்னகரம்"
என்று புரிந்து கொள்ளலாம்.

இதே மாதிரித்தான் 'ந' கரம் என்பதை, "தந்நகரம்" என்று சொல்ல வேண்டும்.
ஏனெனில் இந்த 'ந்' எழுத்தை அடுத்து
வரக்கூடிய உயிர்மெய் 'த' மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை).

இந்த "ண", "ன" மற்றும் "ந" விளக்கம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்..........

அருமையான விளக்கம்  இதுவரை பலபேருக்கு தெரியாமல் இருந்தது.
தமிழறிவோம் இதை பலபேருக்கு பகிர்வோம்.

1 comment:

  1. தமிழில் எழுதும் போது நமக்கு ஏற்படும் ஐயங்களில் குறிப்பிடத்தக்கவை "ர,ற" , “ல,ழ,ள” , “ன,ண” வேறுபாடு. அவை எவை? விளக்குக

    ReplyDelete

இந்த தளத்தை பயன்படுத்தியமைக்கு நன்றி.