உலக அழகி 2017
தேசிய செய்திகள்
உலக அழகி பட்டம் வென்ற மனுஷி சில்லர்; பாலிவுட் திரைபிரபலங்கள் வாழ்த்து
சீனாவின் சான்யா நகரில் மிஸ் வேர்ல்டு 2017 போட்டி நடந்தது. இந்த போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் மகுடம் சூடினார்.
நவம்பர் 19, 12:19 PM
புதுடெல்லி,
அரியானாவை சேர்ந்த 20 வயது நிறைந்த மருத்துவ மாணவியான மனுஷி இந்த வருடம் மே மாதம் நடந்த பெமினா மிஸ் இந்தியா வேர்ல்டு 2017 போட்டியில் பட்டம் பெற்றவர்.
உலக அழகி பட்டம் வென்ற மனுஷி சில்லருக்கு பாலிவுட் திரைபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நடிகர் அமிதாப் பச்சன் டுவிட்டரில், நமது உலகில் இருந்து மிஸ் வேர்ல்டு… பெருமை மற்றும் மகிழ்ச்சி மனுஷி சில்லர் என தெரிவித்துள்ளார்.
நடிகை சுஷ்மிதா சென், இந்தியா மிஸ் வேர்ல்டு 2017 வென்றுள்ளது ! ! சில்லருக்கு வாழ்த்துகள். பெருமை அளிக்கிறது. ஜெய்ஹிந்த் என தெரிவித்துள்ளார்.
இதுபோன்று நடிகைகள் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே, நேஹா தூபியா, முன்னாள் மிஸ் ஆசியா பசிபிக் தியா மிர்சா, நடிகர்கள் அனுபம் கெர், ரந்தீப் ஹூடா உள்ளிட்டோர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவை சேர்ந்த ரீட்டா பரியா முதன்முதலில் 1966ம் ஆண்டு உலக அழகி பட்டத்தினை வென்றார். அவரை தொடர்ந்து 1994ம் ஆண்டு ஐஸ்வர்யா ராயும், 1997ம் ஆண்டில் டையானா ஹெய்டனும் இந்த பட்டம் வென்றனர்.
நடிகை பிரியங்கா சோப்ரா 2000ம் ஆண்டிலும் அதற்கு முந்தைய வருடம் யுக்தா முகியும் வெற்றி பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர்.
No comments
இந்த தளத்தை பயன்படுத்தியமைக்கு நன்றி.