ads header

Breaking News

இன்றைய செய்திகள் 03.08.2021


இன்றைய செய்திகள்
3.08.2021(செவ்வாய்க்கிழமை)
🌹பிரியமானவர்கள் ஒரு போதும் நம்மை காயப்படுத்தமாட்டார்கள் என்று நம்ப வேண்டாம்.
சில சமயம் எதிரியை விட மோசமாக காயப்படுத்தி விடுவார்கள்.!
🌹🌹பதிலுக்கு பேசுபவர்களிடம் கூட வாதாடலாம் ஆனால் வீம்புக்குனு பேசுபவர்களிடம் அமைதியாய் இருப்பது தான் நமக்கான மரியாதை ஆகும்.!!
🌹🌹🌹குறைகளை ஏற்று நிறைவோடு வாழ்வது தான் வாழ்க்கை.
வாழ்வில் இருக்கும் குறைகளை மட்டுமே கண்டு கொண்டிருந்தால் வாழ்வில் உள்ள நிறைகளைக் காண முடியாது.!!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🍒🍒ஒன்றாம் வகுப்பு முதல் தமிழ் வழியில் பயின்றோர் மட்டுமே தமிழ்வழி இட ஒதுக்கீடு பெறத் தகுதியானவர்கள் - TNPSC தெளிவான அறிக்கை வெளியீடு.
🍒🍒அரசின் அனுமதி கிடைத்தவுடன் - விரைவில் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் : தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் தகவல்.
🍒🍒பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடா்பாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை
🍒🍒சட்டப் படிப்புகளில் சேர ஆக.4 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு சட்டப் பல்கலை. அறிவிப்பு.
🍒🍒அரசுத் துறைகளில் 4 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்.
(நாளிதழ் செய்தி)
🍒🍒கற்போம் எழுதுவோம் இயக்கத்தின்கீழ் அடிப்படை எழுத்தறிவு: 3.21 லட்சம் பேர் பயனடைந்தனர் - திட்ட இயக்குநர் செய்திக் குறிப்பு.
(நாளிதழ் செய்தி)
🍒🍒RTE - தனியார் பள்ளி இலவச சேர்க்கை விண்ணப்பிக்க இன்று கடைசி.
🍒🍒கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிடுவது, புதிய உருமாற்றத்தால் கொரோனா 3ம் அலை ஏற்படுவது உறுதி: சிஎஸ்ஐஆர் எச்சரிக்கை.
🍒🍒புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடா்பாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனையில் கல்வித்துறை, சுகாதாரத்துறை செயலாளர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.                                                    🍒🍒அண்ணா பல்கலை. துணைவேந்தராக தமிழரே வேண்டும் - ஆசிரியர் கூட்டமைப்பு கடிதம்
🍒🍒உத்தரப் பிரதேசம் : ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு.
🍒🍒பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களின் (ஆசிரியர்கள் உட்பட) இன வாரியான (Community Category) எண்ணிக்கை விபரம் கோரிய தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவிற்கு பதிலளிக்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு.
🍒🍒ஆக. 16-ல் பிளஸ் 2 துணைத்தேர்வு: சிபிஎஸ்இ
👉சிபிஎஸ்இ பிளஸ் 2 துணைத் தேர்வு ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
👉12-ஆம் வகுப்பு மதிப்பெண் முறையில் திருப்தி இல்லாத மாணவர்கள் துணைத்தேர்வை எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
👉19 பாடங்களுக்கு மட்டுமே துணைத் தேர்வு நடைபெறும் என்றும்,
👉துணைத் தேர்வு எழுத விரும்புவோர் விண்ணப்பிக்க ஏதுவாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் சிபிஎஸ்இ தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
👉விருப்பத்தேர்வு எழுத விரும்புவோர் மீண்டும் தேர்வுக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை எனவும், ஏற்கெனவே கட்டணம் செலுத்திய தனித்தேர்வர்களும் மீண்டும் கட்டணம் செலுத்தத் தேவையில்லை எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது                                                         🍒🍒தமிழர் ஒருவரை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என்று ஆளுநருக்கு அண்ணா பல்கலை. சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.
இறுதி நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 10 பேரின் பெயர்களை வெளியிட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது
🍒🍒தமிழகத்தில் செப்டம்பா் முதல் நவம்பா் மாதம் வரை இணையவழியில் ஆசிரியா் தேர்வு வாரியத் தேர்வுகள் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
🍒🍒தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் ஜூன் மாதப் பருவத் தேர்வு முடிவுகள்  அறிவிக்கப்பட்டுள்ளன. 
🍒🍒தமிழக அரசு கல்வி நிறுவனம் நடத்தும் தொழிலாளர் மேலாண்மை படிப்புகளில் சேர ஆகஸ்ட் 10-ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் 
🍒🍒தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ அங்கீகாரம் வழங்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், சேர்க்கை கலந்தாய்வில் மொத்த இடங்களை உறுதி செய்வதில் சிக்கல் நிலவுகிறது.
🍒🍒'புதிய கல்வி கொள்கை அடிப்படையில்' CBSE பள்ளிகளில் பணிபுரிய நடத்தப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (CTET) 2021 ஆம் ஆண்டிற்கான தேர்வு முறையில் மாற்றங்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
🍒🍒தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு விரைவில் பள்ளிகள் திறப்பு - நாளிதழ் செய்தி 
🍒🍒தமிழகத்தில் RTE திட்டத்திற்கான ஆர்வம் குறைந்தது – அரசு பரபரப்பு தகவல
🍒🍒5ஆண்டு கண்காணிப்பாளராக பணியாற்றியவர்களை கருவூல உதவி கணக்கு அலுவலர் பணியிடங்களில் நிரப்ப திட்டம் 
🍒🍒தேசிய மருத்துவ ஆணையத்தின் முதுகலை கல்வி வரைவிற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. மாநில அரசுகளின் ஒதுக்கீட்டின் கீழ் முதுகலை மருத்துவ சேர்க்கையில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய ஒன்றிய அரசுக்கு கடிதம்.
🍒🍒சட்டமன்றத்தில் திரு.கருணாநிதி புகைப்படம் 
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் புகைப்படம் தமிழ்நாடு சட்டமன்ற வளாகத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
🍒🍒இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் கருணாநிதியின் படத்தை திறந்ததில் மகிழ்கிறேன் என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழில் உரை.
🍒🍒கலைஞர் படத்தை ஜனாதிபதி திறந்ததை நினைத்து முதல்வராக மகிழ்கிறேன்; கலைஞர் மகனாக நெகிழ்கிறேன்.
முதல்வர் ஸ்டாலின்                                                      👉வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாக இந்த நாள் அமைந்துள்ளது என்று தமிழக சட்டப்பேரவையில் கருணாநிதி படத்திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இதனை கூறியுள்ளார். 
👉பார் போற்றும் பல்வேறு சட்டங்களை நிறைவேற்றிய பெருமை தமிழக சட்டமன்றத்துக்கு உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.
👉இந்திய வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு வந்துள்ள ராம்நாத் கோவிந்த்
வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள்.
👉சமூகநீதியை வாழ்க்கையின் இலக்காக கொண்டவர் குடியரசு தலைவர்
முதல்வர் ஸ்டாலின்.
🍒🍒பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், தொழிலாளர் நலன்களுக்கு பல்வேறு நல வாரியங்கள், இலவச தொலைக்காட்சி,சாதி ஒழிப்புக்கு சமத்துவபுரம்- எல்லாம் அருமையான திட்டங்கள்
மற்ற மாநிலங்கள் இதனை பின்பற்ற வேண்டும்
ஆளுநர் பெருமிதம்.
👉தமிழ்நாடு சட்டமன்றம், நாட்டிலுள்ள சட்டமன்றங்களில் முதன்மையானது 
கலைஞர் திருவுருவப்பட திறப்பு விழாவில் பங்கேற்பதில் பெருமை 
அரசியல், தமிழ்மொழி என பல்துறை வித்தகராக திகழ்ந்தவர் கலைஞர்
ஏழை, எளிய மக்களின் வாழ்வு மேம்பட பாடுபட்டவர் கலைஞர் 
சட்டமன்ற நூற்றாண்டு விழா - தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை
👉கருணாநிதி படத்திறப்பு விழாவில் நன்றி..வணக்கம்.. ஜெய் ஹிந்த்.. ஜெய் தமிழ்நாடு என முழங்கி உரையை நிறைவு செய்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்                                                                        🍒🍒தோல்வியின்றி 13 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கலைஞர் 
குடியரசு தலைவரை வரவேற்று சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு உரை.
👉சாதாரண குடும்பத்தில் பிறந்து ஜனாதிபதி ஆனவர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.
சிறந்த பத்திரிக்கையாளர் குடியரசு தலைவர்
பேரவை தலைவர்.
👉சுதந்திர தினத்தில் முதல்வர்கள் கொடி ஏற்றும் உரிமையை பெற்று தந்தவர் கருணாநிதி
பேரவை தலைவர் புகழாரம்.
👉கருணாநிதி அவர்கள் இந்தியாவின் முன்னோடி
தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமை
பேரவை தலைவர்.
👉வெற்றிகரமாக சட்டமன்ற நூற்றாண்டு விழாவை முடித்து சபாநாயகர் அப்பாவு கலைஞர் நினைவிடத்தில் மரியாதை.
🍒🍒1977ல் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் காமராஜர் படத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்.
அதன் பின்னர் தற்போது முன்னாள் முதல்வர் மு கருணாநிதியின்  படத்தை திறந்து வைக்க குடியரசுத் தலைவர் வந்திருக்கிறார்.
சட்டப்பேரவையில் வேறு எந்த தலைவர்களின் படங்களும் குடியரசுத் தலைவரால் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.                                                            🍒🍒கொரோனா 3-வது அலை ஆகஸ்டில் உருவாகும்; அக்டோபரில் உச்சமடையும் - ஐஐடி வல்லுநர்கள் எச்சரிக்கை.
🍒🍒டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு ஆளுநர் வாழ்த்து தெரிவித்தார்.
தலைசிறந்த பேட்மிண்டன் வீராங்கனை என்பதை பி.வி.சிந்து மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார் என கூறினார்.                                      🍒🍒பிரதமர், உள்துறை அமைச்சருக்கு எதிரான வழக்கை வரும் 5-ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.
டெல்லி காவல் ஆணையராக ராகேஷ் அஸ்தானாவை நியமித்ததை எதிர்த்து வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
🍒🍒மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 3 மாதங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூன்றாம் பாலினத்தவருக்கு கொரோனா நிவாரண நிதியில் முதல் தவணை ரூ.2,000 வழங்கப்பட்டுள்ளது என அரசு தலைமை வழக்கறிஞர் கூறினார். மூன்றாம் பாலினத்தவருக்கு கொரோனா நிவாரண நிதியின் 2-ம் தவணையும் வழங்கப்படும் எனவும் கூறினார்.
🍒🍒எதிர்க்கட்சிகளை சேர்ந்த மக்களவை, மாநிலங்களவையில் தலைவர்கள் இன்று காலை டெல்லியில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ஒரு முறை கூடி ஆலோசித்த நிலையில் இன்று மீண்டும் எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்துகின்றனர்.
🍒🍒அரைஇறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவை தோற்கடித்து அரைஇறுதியில் நுழைந்திருப்பது பெறும் மகிழ்ச்சி தருகிறது என அவர் கூறியுள்ளார்.
🍒🍒சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்துள்ளது.
ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,536க்கும் ஒரு சவரன் ரூ.36,288க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.73.10 க்கு விற்பனையாகிறது.
🍒🍒தமிழகத்தில் மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 3 கோடியைத் தாண்டியுள்ளது.
இவற்றில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடியே, 56 லட்சத்து, 31 ஆயிரத்து, 565 என்று அரசு புள்ளிவிவரத்தில் தெரிய வந்துள்ளது.
🍒🍒புதிய குடும்ப அட்டை வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபட்ட வட்ட வழங்கல் அதிகாரிகள் 2 பேர் தற்காலிக பணியிடை நீக்கம்
முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
அமைச்சர் சக்கரபாணி
🍒🍒மகளிர் ஹாக்கி - இந்தியா வரலாற்று சாதனை.
ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டி ; காலிறுதி சுற்றில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
காலிறுதியில் ஆஸ்திரேலிய அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி.
🍒🍒கொடைக்கானலில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனைச் சாவடியில் பரிசோதன
கொடைக்கானலில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனைச் சாவடியில் பரிசோதனை செய்யப்படுகிறது. 
வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு மருத்துவ குழுவினர் கொரோனா பரிசோதனை செய்தனர்.
🍒🍒படத்திதிறப்பு விழா வைகோ நெகிழ்ச்சி
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருணாநிதி படம் திறப்பு விழாவில் நெகிழ்ச்சியுடன்  காணப்பட்டார்.
கருணாநிதியின் உருவப்படத்தை திறந்த போதும் அவரை பற்றி ஆளுநரும், குடியரசுத் தலைவரும் புகழுரை வாசித்த போது உணர்ச்சிவசப்பட்டவராய் காணப்பட்டார்.
🍒🍒சுங்கக்கட்டணம் செலுத்த பாஸ்டேக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 96% ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
வாகன ஓட்டிகளிடம் சுண்ணக்கட்டணம் வசூலிக்கும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர்                                                         
கரூர் மாவட்டம்.

No comments

இந்த தளத்தை பயன்படுத்தியமைக்கு நன்றி.