ads header

Breaking News

தமிழ் இந்து செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள்.
(20.02.2021)
நன்றி:
தமிழ் இந்து

பெட்ரோல், டீசல் விலை உயர்வு. நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் பதிலளிக்க தலைவர் மறுப்பு.

பெரிய வெங்காயம் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் அறிவிப்பு.

பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி விரைவில் அனுமதி கிடைக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு.

ஏசி பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி பொதுமக்கள் பெருந்திரள் பேரணி.

சட்ட அமைச்சர் விருப்பப்படி மனித உரிமை ஆணைய தலைவர் நியமனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு.

அமெரிக்காவில் குடியுரிமை மசோதாவில் மாற்றம். பயனடையும் இந்தியர்கள்.

வரட்டாறு அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு.

ரூபாய் 25 லட்சம் வரை கடன். 35 சதவீதம் வரை மானியம். கோவையில் பிப்ரவரி 23 ல் சுயதொழில் கடன் மேளா.

சிபிஎஸ்இ பாடப் புத்தகத்தில் சர்ச்சைக்குரிய வகையில் திருவள்ளுவரின் உருவப்படம். திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்.

ஜல்லிக்கட்டு வழக்குகள் வாபஸ். வெளியானது அரசாணை.

அனைத்து மக்களுக்கும் ஏற்ற பட்ஜெட்டாக இருக்கும். அமைச்சர் திண்டுக்கல்  சீனிவாசன் பேச்சு.

ரூபாய் 380 கோடி வசூலித்து மாநிலத்தில் சிறப்பிடம். மதுரை கோட்ட எல்ஐசி அதிகாரி தகவல்.

உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு க்கு இடைக்கால தடை. உயர் நீதிமன்றம் உத்தரவு.

நாகை மாவட்டம் புஷ்பவனம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஒரு பள்ளிவாசலுக்கு இந்து சமுதாயத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் மார்பிள் கற்களை வழங்கியுள்ளார்.

சரித்திரம்தான் படைப்பேன், பிழை செய்யமாட்டேன்: புதுச்சேரி முதல்வருக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதில்.

திருப்பத்தூர் அருகே தடுப்பணையில் கழுத்தளவு தண்ணீரில் உயிரிழந்த நபரின் உடலை எடுத்துச் சென்ற பொதுமக்கள்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு  தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்தி உள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் புதிதாக 29 பேருக்கு கொரோனா. இறப்பு விகிதம் 1.67.

ஆதிச்சநல்லூர், சிவகளையில் இரண்டாம் கட்ட அகழ்வாய்வுக்கு ஆயத்த பணி தொடக்கம். முட்களை அகற்றி சுத்தம் செய்தனர்.

நெல்லை மாவட்டத்தில் கோடை தொடங்கும் முன்பே  44 குளங்கள் வறண்டு போயின.

வாழ்வாதாரம் மேம்படுவதற்காக ரேஷன் கடைகளில் வெல்லம் விற்பனை செய்ய வேண்டும். தமிழக அரசுக்கு உற்பத்தியாளர்கள் வேண்டுகோள்.

காலிஸ்தான் ஆதரவாளர்களுடன் திஷா ரவிக்கு தொடர்பு: ஜாமீன் வழங்க கூடாது என போலீசார் எதிர்ப்பு. தீர்ப்பை ஒத்திவைத்தது டெல்லி நீதிமன்றம்.

கொரோனா பாதிப்பு: கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் தினசரி பாதிப்பு உயர்வு.

மாஸ்க் போட மறந்த ஜெர்மனி அதிபர். வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

கும்பகோணத்தில் குண்டும் குழியுமாக சாலை இருந்ததால் இரட்டை வீதிக்கு செல்லாத 63 நாயன்மார்கள் வீதியுலா. பக்தர்கள் ஏமாற்றம்.

அன்புடன்:
வை.தமிழ்மணி ஆசிரியர்,
மருதூர் வடக்கு,
வேதாரண்யம்.

kannaati.blogspot.com

vairathamizhmani.blogspot.com

thamizhmani.com

No comments

இந்த தளத்தை பயன்படுத்தியமைக்கு நன்றி.