செய்திகள்
அனைவருக்கும் வணக்கம்.
இனி வாட்ஸ் அப் மூலம் நீங்கள் பணம் அனுப்பலாம்.
வாட்ஸ் அப் நிறுவனம் அறிவிப்பு.
அமெரிக்காவைச் சேர்ந்த, 'வாட்ஸ் ஆப்' நிறுவனம், நம் நாட்டில், பணப் பரிவர்த்தனை சேவையை துவக்கியுள்ளது.மொபைல் போன் வாயிலாக பேசவும், தகவல்கள், படங்கள் ஆகியவற்றை பரிமாறிக் கொள்ளவும், 'வாட்ஸ் ஆப்' செயலி உதவுகிறது.
சோதனை
'பேஸ்புக்' சமூக வலைதளத்தின் துணை நிறுவனமான வாட்ஸ் ஆப், இந்தியாவில், 2018 முதல், சோதனை அடிப்படையில், மொபைல் போன் வாயிலாக பணப் பரிவர்த்தனை சேவையை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், பொதுத் துறையைச் சேர்ந்த, என்.பி.சி.ஐ., நிறுவனம், யு.பி.ஐ., எனப்படும், ஒருங்கிணைந்த பணப் பட்டு வாடா சேவையின் கீழ், வாட்ஸ் ஆப் நிறுவனம் நிதிச் சேவையில் களமிறங்க அனுமதி அளித்துள்ளது. இது குறித்து பேஸ்புக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, மார்க் ஸூகர்பர்க் கூறியிருப்பதாவது:
இந்தியர்கள், இனி வாட்ஸ் ஆப் மூலம், கடைகளில் வாங்கும் பொருட்களுக்கான பணத்தை செலுத்தலாம். ஒருவருக்கு ஒருவர், பணம் அனுப்பலாம். இதற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது. தனி நபர்களின் தகவல்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளின் பாதுகாப்புக்கு வலிமையான கட்டமைப்பை, வாட்ஸ் அப் ஏற்படுத்திஉள்ளது.
முதன் முறை
வங்கிக் கணக்கு மற்றும், 'டெபிட் கார்டு' உள்ளோர், தமிழ், ஹிந்தி உள்ளிட்ட, 10 மொழிகளில், பணப் பரிவர்த்தனை சேவைகளை மேற்கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதம், தென் அமெரிக்காவைச் சேர்ந்த, பிரேசில் நாட்டில் முதன் முறையாக, வாட்ஸ் ஆப், பணப் பரிவர்த்தனை சேவை துவக்கப்பட்டது.
வாடிக்கையாளருக்கு கட்டுப்பாடு
இந்தியாவில், 40 கோடி பேர், 'வாட்ஸ் ஆப்' பயன்படுத்துகின்றனர். எனினும், பணப் பரிவர்த்தனை சேவையை, முதற்கட்டமாக, இரண்டு கோடி பேருக்கு மட்டுமே வழங்க, என்.பி.சி.ஐ., அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில், மொபைல் போன் வாயிலான பணப் பரிவர்த்தனை சேவையில், வால்மார்ட்டின், 'போன் பே' நிறுவனம், 25 கோடி பேருடன் முதலிடத்தில் உள்ளது. 'கூகுள் பே, அமேசான் பே, பேடிஎம்' நிறுவனங்களும் மொபைல்போன் வாயிலான பணப் பரிவர்த்தனை சேவையை வழங்கி வருகின்றன.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் கல்வித்துறை அமைச்சர்கள் ஆலோசனை
பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் சந்திப்பு
வருகிற 16ஆம் தேதி பள்ளி,கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், முக்கிய ஆலோசனை
தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் பள்ளிகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது
ட்ரம்ப் vs பைடன் - இழுபறியில் முடிவுகள் :
ஜோ பைடன் வெற்றி பெற 6 வாக்குகள் தேவை
டிரம்ப் வெற்றி பெற 56 வாக்குகள் தேவை.
அமெரிக்க அதிபர் யார்? - முடிவுகளில் இழுபறி
பெரும்பான்மை - 270, மொத்த வாக்குகள் - 538
குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்பின் தேர்வாளர் வாக்குகள் - 214
ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனின் தேர்வாளர் வாக்குகள் - 264
தென் மாவட்டங்களில் பரவலாக மழை :
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னையிலும், விருதுநகர், தூத்துக்குடி, தேனி மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
சென்னையில் இருதினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று நள்ளிரவில் மிதமான மழை பெய்தது.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால், சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்து வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு பகுதியில் மழையுடன் பலத்த காற்று வீசியதில் சாலையில் மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம் மற்றும் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை கொட்டிதீர்த்தது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்.
வடகிழக்கு பருவமழை காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு.
செய்திகள்
Reviewed by Thamizhmani.V
on
November 05, 2020
Rating: 5
No comments
இந்த தளத்தை பயன்படுத்தியமைக்கு நன்றி.