ads header

Breaking News

தகட்டூர் ந.செல்வகுமார் வானிலை அறிக்கை

https://youtu.be/k9qRvwrV9lI

அறிக்கையை பார்க்க மேலே உள்ள நீல நிற எழுத்தை கிளிக் செய்யவும்.🌧

20.7.19-5 PM.
தகட்டூர் ந. செல்வகுமார்  அறிக்கை.
 
  கேரளா அருகே நீடித்த காற்று சுழற்சி கர்நாடகா கரையோரம் நகர்ந்தது.

ஆந்திரா கரையோரம் நீடித்த தாழ்வுநிலை  சட்டிஸ்கர் பகுதிக்கு சென்று மகாராஷ்டிரா நோக்கி நகர்கிறது.
பாலக்காடு கணவாய் வழி திருப்பூர் உடுமலை இடையே தாராபுரம் வழி 55KMPH to 60KMPH காற்று ஜூலை 25 வரை நுழையும்.

அது டெல்டா மாவட்டங்கள் வரை தரை மேற்கு காற்றாக வீசும். டெல்டா & தென் தமிழக கடலோரம் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது.

தரை காற்று வந்தாலும் மேலடுக்கு சுழற்சியால் மாலை இரவு அதிகாலை ஆங்காங்கே  மழை தொடரும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நல்ல மழை பெய்யும். வட மாவட்டடங்களுக்கு கூடுதல் வாய்ப்பு.

டெல்டா மாவட்டங்களுக்கு லேசான மிதமான மழை பெய்யும்.

கேரளாவில் பெய்யும் அதி கன மழை, தெற்கு அந்தமான் காற்று சுழற்சி தமிழகம், ஆந்திரா கிழக்கே  அப்பால் நகர்ந்து ஒடிசா கரையோரம் சென்று ஜூலை 24இல் தாழ்வு நிலையாக தரை ஏறும் என்பதால் மேற்கு காற்று கேரளா மேற்கு தொடர்ச்சி மலை வழி தமிழகம் நுழைந்து ஜூலை 21, 22, 23 இல் கேரளாவில் பரவலாக மிக கன மழையாக பெய்யும்.

தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழையாக பெய்யும்.

அந்த ஜூலை 22இல் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் கனமழை வாய்ப்பு தெரிகிறது.

ஜூலை 22 இல் தமிழகம் எங்கும் சற்று பரவலாக நல்ல மழை தெரிகிறது.

தமிழக அணைகள் நல்ல நீர்மட்டம் உயரும் நிலையில், கர்நாடகாவின் கபினி நிரம்பும்.

      ஜூலை 24இல் கேரளாவில் விலகும் இந்த சுற்று தென் மேற்கு பருவ மழை, ஜூலை 24, 25, 26, 27 இல் வட மாநிலங்களில் கன, மிக கனமழையை கொடுத்துவிட்டு, ஜூலை 28, 29,30, 31இல் மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் மிக கன மழையை கொடுத்தபிறகு, ஆகஸ்ட் 1, 2, 3, 4இல் டெல்லி வழி உத்தரகாண்ட், உத்திரபிரதேசம், நேபாளம் சென்று செயலிழந்த பிறகு,
மீண்டும் ஆகஸ்ட் 5க்கு மேல்  மீண்டும் கேரளா கர்நாடகாவில் தென்மேற்கு  பருவ மழை தொடங்கும். 
    ஆனால் தமிழகத்தில் வெப்பச்சலன மழை நீடிக்கும்.

No comments

இந்த தளத்தை பயன்படுத்தியமைக்கு நன்றி.