ads header

Breaking News

தாய் எனும் தெய்வம்

கவிதை : ப.இராஜரெத்தினம்
_______________
          தாய்
         எனும்
      தெய்வம்
_______________

இரைப்பை
மறந்து
கருப்பை
சுமந்தவளே

உயிர் வலி
சுமந்து
உயிர் வழி
தந்தவளே

நான்
தெய்வத்தை
கண்டதில்லை
இரு கண்ணால்

கண்டேனே
தாய் என்னும்
வடிவில்
என் முன்னால்

ஒரு நாள்
போதுமா
உன் புகழ்
சொன்னால்

தொழுகிறேன்
உன்னை
தினமும்
என் மன
கண்ணால்

கல் சுமந்தாய்
மண் சுமந்தாய்
விறகு புகையில்
காலமெல்லாம்
கழித்தாய்

வஞ்சகம்
சூது வன்மம்
அத்தனையும்
என் மனமிருந்து
ஒழித்தாய்

அன்பெனும்
பாதை
அமைத்தாய்

நல்ல
பண்பெனும்
மாண்பை
கொடுத்தாய்

நீ தானம்மா
எம்
குல விளக்கு

நீ இல்லாமல்
இருண்டதம்மா
எம் கிழக்கு

பூமியில்
உன் போல்
தியாகி
யார் ?

மீண்டும்
ஒரு முறை
என்னை
மடி
சுமந்து பார் ?

உன்
அன்பில்
கழிந்தது
இனிய
காலம்

அமைதியாய்
கழியுமா
இனி வரும்
காலம்

உன்
பாதமலர்
தொழுகிறேன்
அது என்
தினசரி
வழக்கம்

என் உயிரில்
உணர்வில்
கலந்து வா
நீ தானே
என்றும்
என் இயக்கம்

உயிர் பிரியும்
வேளையிலும்
உயிராய்
எம்மை
நினைத்தாய்

எம் உயிர்
பிரியும்
வரையிலும்
எம்மை
கண்ணீரில்
நனைத்தாய்

நீ
இன்னும்
இறக்கவில்லை

உன்னை
நான்
மறக்கவில்லை

அன்பை
நீ தந்த
பண்பை
துறக்கவில்லை

நான்
சிறந்து வாழ
நல் வழி
கொடுத்தாய்

நீ
இறந்த பின்னும்
இருவருக்கு
விழி
கொடுத்தாய்

என் கண்ணில்
ஒரு துளி
நீர் வந்தாலும்
துடித்திடுமே
உன் குருதி

நீ தந்த
உயிரை
ஒரு நாள்
உன் காலடியில்
கொண்டு
வைப்பேன்
இது
உறுதி

பிரிவென்னும்
மீள முடியா
சுமையை
என் மனதில்
தந்தாய்

என்னை
எப்படியம்மா
வயிற்றில்
பத்து மாதம்
சுமந்தாய்

தெரிகிறது
உன் அன்பின்
காலடி தடம்

உன் பாத
சுவடுகளே
என்
வழித்தடம்

நான்
அனுதினமும்
உச்சரிக்கும்
பெயர்
சிவபாக்கியம்

உன்னை
தாயாய்
பெற்றது
இப்பிறப்பில்
நான் செய்த
பாக்கியம்

உன்
அன்பை
தேடி
வருவேன்
ஒரு நாள்
உன்னிடம்

ஓடி
ஆடி
விடை
பெறுவேன்
தாய்
மண்ணிடம்...

______________________
            பிரிவின்                                    
          ஏக்கத்தில்

  ப.இராஜரெத்தினம்
______________________

     ( மடி சுமந்த
       தாயின்
       நினைவில்

       மனம்
       சுமந்த
       வரிகள்...

        ஓராண்டு
        நிறைவு
        இன்று...(13.11.2018)

No comments

இந்த தளத்தை பயன்படுத்தியமைக்கு நன்றி.