வடகரை பள்ளி
தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி
இந்திய நாட்டின் ஒற்றுமையையும் , ஒருமைப்பாட்டையும் , பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும் இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமார உறுதியளிக்கிறேன். சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்குப் பார்வையாலும் , நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன்.எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமார உறுதி அளிக்கிறேன்.
நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் ஒன்றியம், வடகரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று (31 10 2018 ) புதன்கிழமை நடைப்பெற்றது.
சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினமான அக்டோபர் 31 ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய ஒற்றுமை நாள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி , தலைமையாசிரியர் செள. குருநாதன் அவர்கள் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.இந்நிகழ்ச்சியில் உதவி தலைமையாசிரியை க. ஜெயந்தி , இடைநிலை ஆசிரியர்கள் ந.சத்யபாமா மற்றும் வை. தமிழ்மணி , பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியர்கள் கு.சுகன்யா, கலையரசி மற்றும் அனுசுயா ஆகியோர் பங்கேற்றனர்.
No comments
இந்த தளத்தை பயன்படுத்தியமைக்கு நன்றி.