கேஸ் இணைப்புக்கான மானியம்
கேஸ் இணைப்புக்கான மானியம் வரவில்லை என்றால்
உங்களது மெபைலில் இருந்து www.mylpg.in என்ற இணையதளத்தில் செல்லவும்.
இணையத்தில் வலதுபக்கம் உங்களது 17 இலக்க LPG id டைப் செய்யவும்.
LPG id தெரியாதவர்கள் அதன் மேலே காணும் Click here எனும் லிங்கை கிளிக் பண்ணவும்.
LPG id தெரியாதவர்கள் அதன் மேலே காணும் Click here எனும் லிங்கை கிளிக் பண்ணவும்.
அதன் பிறகு வரும் கட்டத்தில் நீங்கள் எந்த கம்பெனி இணைப்பை பெற்று இருக்கிறீர்கள் என்பதை கொடுக்கவும்.
பிறகு வரும் திரையில் உங்களது Consumer எண்ணை அல்லது உங்களது பதிவு செய்யபட்ட மெபைல் எண்ணை டைப் செய்யவும், பிறகு தோன்றும் திரையில் காணும் கோட்டினை கீழே உள்ள பாக்சில் டைப் செய்து Proceed பட்டனை அமுக்கவும்.
இப்போது உங்களது 17 இலக்க LPG id கிடைக்கும். இந்த Id யை முன்னர் கூறிய பாக்சில் டைப் செய்து Submit பட்டணை அமுக்கவும்.
இப்போது தோன்றும் திரையில் உங்களது கேஸ் இணைப்பு மானியத்துக்கான முழுவிவரங்களும் கிடைக்கும். உங்களது கணக்கின் மீத தொகை, எவ்வளவு மானியம் வந்துள்ளது போன்ற விவரங்கள் அதில் இருக்கும்.
உங்களுக்கு மானியதொகை எதுவும் அதில் தெரியவில்லை எனில் அந்த இணையத்தில் Feedback பட்டனை அமுக்கி புகாரினை பதிவு செய்யலாம்.
அது மட்டும் இல்லாமல் இலவச அழைப்பான 18002333555 என்ற எண்ணில் அழைத்து சரியான தகவல்களை கொடுத்து புகாரினை பதிவு செய்யலாம்.
No comments
இந்த தளத்தை பயன்படுத்தியமைக்கு நன்றி.