ads header

Breaking News

ரூபே , பீம் செயலி மூலம் பணம் செலுத்தினால் ஊக்கத்தொகை

ரூபே', 'பீம்' செயலி மூலம் பணம் செலுத்தினால் ஊக்கத்தொகை: ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்

"பீம்' செயலி மற்றும் "ரூபே' அட்டை வாயிலாக பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு ஜிஎஸ்டி வரியில் 20 சதவீதத்தை ஊக்கத் தொகையாக அளிக்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.

சோதனை முயற்சியாக சில மாநிலங்களில் அதை முதலில் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், அதன் தொடர்ச்சியாக அது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
முன்னதாக, இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான ஒப்புதலை பிகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி தலைமையிலான மாநில அமைச்சர்கள் குழு அளித்தது.
நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்புக்கு வழிவகுக்கும் ஜிஎஸ்டி நடைமுறை, கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமல்படுத்தப்பட்டது.

No comments

இந்த தளத்தை பயன்படுத்தியமைக்கு நன்றி.