கீரைகளும் பயன்களும்
*40 வகை கீரைகளும் அதன் முக்கிய மருத்துவ பயன்களும்*
*அகத்திக்கீரை* - ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.
*காசினிக்கீரை* - சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
*சிறுபசலைக்கீரை* - சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.
*பசலைக்கீரை* - தசைகளை பலமடையச் செய்யும்.
*கொடிபசலைக்கீரை* - வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.
*மஞ்சள் கரிசலை* - கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.
*குப்பைகீரை* - பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.
*அரைக்கீரை* - ஆண்மையை பெருக்கும்.
*புளியங்கீரை* - சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.
*பிண்ணாருக்குகீரை* - வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.
*பரட்டைக்கீரை* - பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
*பொன்னாங்கன்னி கீரை* - உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.
*சுக்கா கீரை* - ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.
வெள்ளை *கரிசலைக்கீரை* - ரத்தசோகையை நீக்கும்.
*முருங்கைக்கீரை* - நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
*வல்லாரை கீரை* - மூளைக்கு பலம் தரும்.
*முடக்கத்தான்கீரை* - கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.
*புண்ணக்கீரை* - சிரங்கும், சீதளமும் விலக்கும்.
*புதினாக்கீரை* - ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.
*நஞ்சுமுண்டான் கீரை* - விஷம் முறிக்கும்.
*தும்பைகீரை* - அசதி, சோம்பல் நீக்கும்.
*முரங்கைகீரை* - சளி, இருமலை துளைத்தெரியும்.
*முள்ளங்கிகீரை* - நீரடைப்பு நீக்கும்.
*பருப்புகீரை* - பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.
*புளிச்சகீரை* - கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.
*மணலிக்கீரை* - வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.
*மணத்தக்காளி கீரை* - வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
*முளைக்கீரை* - பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
*சக்கரவர்த்தி கீரை* - தாது விருத்தியாகும்.
*வெந்தயக்கீரை* - மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
l *தூதுவலை* - ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.
*தவசிக்கீரை* - இருமலை போக்கும்.
*சாணக்கீரை* - காயம் ஆற்றும்.
*வெள்ளைக்கீரை* - தாய்பாலை பெருக்கும்.
*விழுதிக்கீரை* - பசியைத்தூண்டும்.
*கொடிகாசினிகீரை* - பித்தம் தணிக்கும்.
*துயிளிக்கீரை* - வெள்ளை வெட்டை விலக்கும்.
*துத்திக்கீரை* - வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.
*காரகொட்டிக்கீரை* - மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.
*மூக்கு தட்டைகீரை* - சளியை அகற்றும்.
*நருதாளிகீரை* - ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்
*உடல் நலம் காத்து உயிர் வளம் பெருக்குவோம்!*
*வாழ்க வளமுடன்!!*
No comments
இந்த தளத்தை பயன்படுத்தியமைக்கு நன்றி.