மயங்கொலிச் சொற்கள்
*மயங்கொலிச் சொற்கள்*
மயங்கொலிச் சொற்கள் என்பன தமிழில் கிட்டத்தட்ட ஒரே வடிவிலான எழுத்துருக்களை கொண்டவைகளாகவும், முற்றிலும் வேறுபட்ட பொருள் கொண்டவைகளாகவும் காணப்படும். இவ்வகையான சொற்கள் ஒலிப்பின் போது நுண்ணிய வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருப்பதால் எது சரி, எது தவறு என மயங்க வைப்பவைகளாக இருக்கும். அதனாலேயே இவற்றை *மயங்கொலிச் சொற்கள்* என்றழைக்கப்படுகின்றன.
தமிழில் உள்ள மயங்கொலிச் சொற்கள்:
*ல, ழ, ள பொருள் வேறுபாடு*
அலகு - பறவையின் மூக்கு, அளவு, ஆண்பனை
அழகு - வனப்பு
அளகு - சேவல், பெண்கூகை
அலகம் - திப்பிலி
அளகம் - வெள்ளெருக்கு, நீர்
அலகை - கற்றாழை, பேய்
அளகை - அளகாபுரி, பெண்
அழம் - பிணம்
அலம் - கலப்பை
அளம் - உப்பு
அலத்தல் - அலட்டல், அலைதல்
அளத்தல் - அளவிடுதல், மதித்தல்
அலவன் - ஆண்நண்டு
அளவன் - அளப்பவன், உப்பு எடுப்போன்
அழி - அழித்துவிடு
அலி - பேடி, காகம், விருச்சிகராசி
அளி - கருணை, கள், வண்டு
அல்லல் - துன்பம்
அள்ளல் - வாரி எடுத்தல்
அழை - கூப்பிடு
அலை - கடல், நீரலை, அலைதல்
அளை - தயிர், நண்டு, புற்று
அவல் - பள்ளம், உணவுப் பொருள்
அவள் - பெண் (சேய்மைச்சுட்டு)
அல் - இரவு
அள் - அள்ளி எடு, நெருக்கம்
உலவு - நட
உளவு - ஒற்று
உழவு - கலப்பையால் உழுதல்
உழி - இடம், பொழுது
உளி - தச்சுக் கருவிகளுள் ஒன்று
உலு - தானியப் பதர்
உழு - நிலத்தை உழு
உளு - உளுத்துப் போதல்
உலை - கொல்லன் உலை, நீருலை
உழை - பாடுபடு, பக்கம், கலைமான்
உளை - பிடரி மயிர், சேறு, தலை
உழுவை - புலி
உளுவை - மீன்வகை
எல் - கல், மாலை, சூரியன்
எள் - எண்ணெய்வித்து, நிந்தை
எலு - கரடி
எழு - எழுந்திரு, தூண்
ஒலி - சப்தம், நாதம், காற்று
ஒழி - அழி, தவிர், கொல், துற
ஒளி - வெளிச்சம், மறை(த்துவை)
ஒல் - ஒலிக்குறிப்பு
ஒள் - அழகு, உண்மை, அறிவு, ஒளி
கலகம் - போர், அமளி, இரைச்சல்
கழகம் - சங்கம், கூட்டமைப்பு
கழங்கம் - கழங்கு, விளையாட்டுக் கருவி
களங்கம் - குற்றம், அழுக்கு
கலி - கலியுகம், பாவகை, சனி
கழி - கோல், மிகுதி, உப்பளம்
களி - மகிழ்வு, இன்பம்
கலை - ஆண்மான், சந்திரன், கல்வி
கழை - மூங்கில், கரும்பு, புனர்பூசம்
களை - அழகு, புல் பூண்டு, அயர்வு
கல் - மலை, பாறை, சிறுகல்
கள் - மது, தேன்
கலம் - கப்பல், பாத்திரம்
களம் - இடம், போர்க்களம், இருள்
காலி - ஒன்றுமில்லாதது, வெற்றிடம்
காளி - துர்க்கை, மாயை
காழி - சீர்காழி (ஊர்)
காலை - பொழுது, விடியற்பொழுது
காளை - காளைமாடு, இளைஞன்
காலம் - பொழுது, நேரம்
காளம் - எட்டிமரம், சூலம்
கிலி - அச்சம், பயம்
கிழி - கிழித்துவிடு, முடிப்பு (பொன்)
கிளி - பறவை, வெட்டுக்கிளி
கிழவி - முதியவள், மூதாட்டி
கிளவி - சொல், மொழி
குலி - மனைவி
குழி - பள்ளம், பாத்தி, பன்னீரடிச் சதுரம், வயிறு
குளி -நீராடு
குலம் -ஜாதியின் உட்பிரிவு, இனம், குடி
குளம் -நீர்நிலை, கண்மாய், ஏரி
குலை - கொத்து, மனம் தடுமாறுதல்
குழை - குண்டலம், குழைந்துபோதல்
குலவி - மகிழ்ந்திருத்தல்
குழவி - குழந்தை, இளமை, யானைக் கன்று அம்மிக்கல்
குளவி - ஒரு வண்டு, காட்டுமல்லி
குலிகம் -சிவப்பு, இலுப்பை
குளிகம் -மருந்து, மாத்திரை
குவலை -துளசி, கஞ்சா
குவளை - குவளை மலர், சொம்பு, ஒரு பேரெண்
கூலம் - தானியம், கடைத்தெரு
கூளம் - குப்பை
கூலி - ஊதியம்
கூளி(யார்) - பேய், காளை, வீரர், படைவீரர், வணங்கி நிற்பவர், ஏவலாளர்
கொலு - அரசசபை, திருவோலக்கம்(தெய்வசபை), உல்லாசமாக வீற்றிருத்தல்
கொழு - மழு, கலப்பையில் மாட்டும் பெரிய இரும்பு, கொழு கொழுத்து இருத்தல்
கொளு - புறப்பொருள் வெண்பாமாலைத் துறை, பொருந்துவாய்
கொலை - கொல்லுதல்
கொளை - கோட்பாடு, பயன், இசைப்பாட்டு, தாளம்
கொல்லாமை - கொலை செய்யாமை
கொள்ளாமை - ஏற்றுக்கொள்ளாமை, அடங்காமை
கொல்லி - உயிர்க்கொல்லி, ஒரு மலை
கொள்ளி - கொள்ளிக்கட்டை
கொல்லை - புழக்கடை, தரிசுநிலம்
கொள்ளை - திருடுதல், மிகுதி
கோலம் - அழகு, அலங்காரம்
கோளம் - உருண்டை, வட்டம்
கோலை - மிளகு
கோழை - வீரமற்றவன், கபம்
கோளை - குவளை, எலி
கோல் - மரக்கொம்பு, அம்பு, குதிரைச்சம்மட்டி, தண்டு, யாழ்நரம்பு
கோள் - கிரகம்
கோலி - இலந்தை, விளையாடும் குண்டு
கோழி - உறையூர், விட்டில், பறவை
கோளி - பூவாது காய்க்கும் மரம், ஆத்தி, ஆலம்
சலம் - நீர், சிறுநீர், குளிர்
சளம் - பொய், துன்பம், வஞ்சனை
சாலை - பாடசாலை, பொது மண்டபம், அறக்கூடம்
சாளை - கடல்மீன்
சாழை - குடிசை, குச்சு
சுழித்தல் - சுழலுதல், நீர்ச்சுழல்
சுளித்தல் - முறித்தல், சினத்தல்
சூலை - வயிற்று நோய்
சூளை - செங்கல் சூளை
சூல் - கர்ப்பம்
சூழ் - சூழ்ந்துகொள், சுற்று
சூள் - சபதம்
சேல் - மீன்
சேள் - மேலிடம்
சோலி - ரவிக்கை, காரியம்
சோழி - பலகரை
சோளி - கூடைவகை
தவளை - ஓர் உயிரி
தவலை - பாத்திரம்
தலம் - இடம், பூமி
தழம் - தைலம்
தளம் - மேடை, மாடி வீட்டின் அடுக்கு
தழை - தாவர உறுப்பு
தலை - மண்டை
தளை - விலங்கு
தாலம் - உலகம், தேன்
தாளம் - இசைக்கருவி, ஜதி
தாலி - மங்கலநாண்
தாழி - கடல், குடம், பரணி பெரியபாண்டம்
தாளி - தாளித்தல், பனைதால் - நாக்கு, தாலாட்டு
தாழ் - தாழ்தல், குனிதல்
தாள் - முயற்சி, பாதம், ஆதி, படி, காகிதம்.
துலக்கம் - ஒளி, தெளிவு
துளக்கம் - அசைவு, வருத்தம், கலக்கம், ஒளி
துலம் - கோரை, கனம்
துளம் - மாதுளை, மயிலிறகு
துலி - பெண் ஆமை
துழி - பள்ளம்
துளி - மழைத்துளி, திவலை, சிறிய அளவு
துலை - ஒப்பு, கனம்
துளை - துவாரம், வாயில்
தூலி - எழுதுகோல், எழுத்தாணி
தூளி - புழுதி, குதிரை
தெழித்தல் - கோபித்தல், முழங்குதல், அதட்டுதல், நீக்குதல், ஆரவாரித்தல்
தெளித்தல் - விதைத்தல், சபதம், கூறல், விதைத்தல்
தெல் - அஞ்சுதல்
தெள் - தெளிவான
தோலன் - அற்பன்
தோழன் - நண்பன்
தோலி - பிசின், ஒருவகை மீன்
தோழி - பாங்கி, நட்பால் நெருக்கமானவள்
தோளி - அவுரி (ஒருவகை குத்துச்செடி), அரக்கு
தோல் - சருமம், வனப்பு, விதையின் மேல்பகுதி
தோள் - புயம், வீரம்
நலன் - நலம், அழகு, புகழ், இன்பம், நன்மை, குணம்,
நளன் - தமயந்தியின் கணவன், ஓர் அரசன்
நலி - நோய்
நளி - குளிர்ச்சி, பெருமை
நலிதல் - நலிந்துபோதல், தோற்றல்
நளிதல் - செறிதல், பரத்தல், ஒத்தல்
நல் - நல்ல
நள் - இரவு, நடு, நள்ளிரவு
நாலம் - பூவின் காம்பு
நாழம் - இழிவுரை, வசவு
நாளம் - பூந்தண்டு, உட்துளை, ரத்தநாளம்
நாலி - முத்து, கந்தை ஆடை
நாழி - உள்தொளையுள்ள பொருள், ஒருபடி, ஏர், அம்பறாத்துணி, நாடா, பூரட்டாதி
நாளி - கல், நாய்
நாலிகை - மூங்கில், அடுப்புச்சந்து
நாழிகை - வட்டம், கடிகாரம்
நால் - நான்கு
நாழ் - குற்றம், செருக்கு
நாள் - காலம், திதி
நீலம் - ஒரு நிறம், கருங்குவளை, இருள்
நீளம் - நெடுமை (நீண்ட), தாமதம்
நீல் - நீலம், காற்று
நீள் - நீளம், ஒளி
பலம் - கிழங்கு, வலி, நெற்றி, சக்தி, சேனை, வன்மை, உறுதி, எடை
பழம் - கனி, முதுமை
பல்லி - சிற்றூர், இடையர் ஊர், உழுகருவி, ஓர் உயிரி, வண்டியுறுப்பு
பள்ளி - இடைச்சேரி, புத்தர்கோயில், குறும்பன், மருதநிலத்தூர், படுக்கை, பள்ளிக்கூடம்
பலி - பலியிடுதல், பலியுயிர்
பழி - குற்றம்
பால் - திரவ உணவு, பகுப்பு, இயல்பு
பாழ் - வீண், வெறுமை
பீழை - துன்பம்
பீளை - கண் அழுக்கு
புலி - காட்டு விலங்கு
புளி - புளியமரம், புளியங்காய்
புலை - புலால், ஊன், கீழ்மை
புழை - துளை, வாயில், நரகம்
புகல் - அடைக்கலம்
புகழ் - பெருமை
புல் - அற்பம், கலவி, புல்பூண்டு
புள் - பறவை
பூலம் - புற்கட்டு
பூளம் - பூவரசு
பூழை - துவாரம், கோபுரவாயில்
பூளை - பூளைச்செடி, இலவம் பஞ்சு
பாலி - தானியக் குவியல், தூற்றாத தானியம்
பாழி - கொடுத்தல், ஈதல்
பாளி - வரப்பு, எல்லை
பாலிவு - அழகு, நிறைவு
பாழிவு - பொழிதல், மேன்மை
போலி - பொய், வஞ்சகம், ஒப்பு
போளி - இனிப்புப் பண்டம்
பொலிதல் - செழித்தல், மங்கலமாதல்
பொழிதல் - ஈதல், கொடுத்தல், சொரிதல், பெய்தல், நிறைதல்
மலம் - அழுக்கு, பாவம்
மழம் - இளமை, குழந்தை
மலை - குன்று, பொருப்பு, வெற்பு,சிகரம்
மழை - மழைநீர், குளிர்ச்சி, மேகம்
மலைத்தல் - வியத்தல், தடுமாறுதல்
மழைத்தல் - மழை பெய்திருத்தல், குளிர்ந்திருத்தல்
மல்லிகை - மாலை, கழுத்தணி, வரிசை
மாளிகை - அரண்மனை, கோயில்
மாலை - அந்திப்பொழுது, பூமாலை
மாழை - மயக்கம், இளமை, அழகு
மாளை - புளியம்பட்டை
மால் - திருமால், மயக்கம், அருகன், இந்திரன், பெருமை, மேகம்
மாள் - இறத்தல், சாதல் (இற,சாவு)
முலை - உடலிலுள்ள ஓர் உறுப்பு
முழை - குகை
முளை - முளைத்தல், தறி, ஆப்பு, அங்குசம், இளமை, தண்டு, மூங்கில்
முழி - விழி (விழித்தல்)
முளி - மரக்கணு, விரல்முளி, வாட்டம்
மூலி - மூலிகை, மரம், வேருள்ளது
மூழி - அகப்பை, சோறு, நீர்நிலை, கோணம்
மூலை - இரு கோடுகள் சந்திக்கும் இடம்
மூளை - மண்டைக்குள் இருக்கும் ஓர் உறுப்பு(முதன்மைப் பகுதி)
மெல்ல - மென்று தின்பது
மெள்ள - மெதுவாக
மாலி - மொளலி கிரீடம்
மாழி - மேழி, கலப்பை
மாளி - துணிமூட்டை
வலம் - சுற்றுதல், வலப்பக்கம், வெற்றி
வளம் - வளமை, அழகு
வலவன் - திருமால்
வளவன் - சோழன், வேளாளன்
வலன் - ஓர் அரசன், வெற்றி, வல்லவன்
வளன் - செழுமை, வளப்பன்
வழப்பம் - வழக்கம், இயல்பு
வளப்பம் - வளமை, செழிப்பு
வலி - நோய், வலிமை, துன்பம்
வழி - நெறி, பாதை, தடம், உபாயம்
வளி - காற்று
வலை - மீன் முதலியன பிடிக்கும் ஒரு கருவி
வழை - சுரபுன்னை, புதுமை, இளமை
வளை - கை வளையல், எலி வளை
வல் - வலிமை, விரைவு, திறமை
வள் - ஒலிக்குறிப்புச் சொல்
வல்லம் - வாழை, ஓர் ஊர்
வள்ளம் - மரக்கலம், படகு, அளவு, தொன்னை
வல்லி - பூமி, பெண், பிரிதல், படர் கொடி
வள்ளி - வள்ளியம்மை, ஆபரணம், சந்திரன்
வலு - வலிமை, பலம், பற்று
வழு - குற்றம், தவறு, பழிப்புரை, கேடு
வளு - இளமை, இளைய
வாலி - கிஷ்கிந்தை அரசன் (இராமாயணம்)
வாழி - வாழ்க (எனவாழ்த்துதல்)
வாளி - அன்பு, வட்ட வாள், வீரன், ஒரு காதணி
வாலை - இளம்பெண், திராவகம் வடிக்கும் பாத்திரம், ஒரு சக்தி
வாழை - வாழைமரம்
வாளை - வாளை மீன்
வால் - விலங்குகளின் ஓர் உறுப்பு
வாழ் - வாழ்வாயாக (என்று வாழ்த்துதல்)
வாள் - போர்வாள், நீண்டகத்தி
விலா - விலா எலும்பு
விழா - திருவிழா, கொண்டாட்டம்
விளா - இளமை, வெண்மை, நிணம்
விழி - கண், கருவிழி
விளி - கூப்பிடு, அழை, ஏழிசையில் ஒன்று
விலை - மதிப்பு, விலைக்கு விற்றல்
விழை - விரும்பு, ஆசைப்படு
விளை - ஒரு மீன்வகை, விளைவி (விளைச்சல்)
விலக்கு - விலக்கி விடு, தவிர்
விளக்கு - விளக்கமாகச் சொல், தீபம்
விலங்கு - பூட்டு, கை, கைகளைப் பிணிக்கும் கருவி, மிருகம்
விளங்கு - திகழ் (திகழ்தல்), சிற்றரத்தை (மூலிகை வகை)
வெல்லம் - சக்கரைக்கட்டி, கருப்பட்டி
வெள்ளம் - மிதமிஞ்சிய நீர்பெருக்கு
வேலம் - வேலமரம், தோட்டம்
வேழம் - யானை, கரும்பு, மூங்கில்
வேல் - வேலாயுதம்
வேள் - வேளிர் குலத்தவன், மன்மதன், ஆசை
வேலை - பணி, கடல்
வேளை - பொழுது, நேரம், ஒருவகைக் கீரை
No comments
இந்த தளத்தை பயன்படுத்தியமைக்கு நன்றி.